வரலாற்றில் இன்று டிசம்பர் 12
இந்திய நாடு, பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911 ஆம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே நாட்டின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் தில்லிக்கு மாற்றியது.
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷார் காலத்திலும் கொல்கத்தாவே நாட்டின் தலைநகராகவே தொடர்ந்த நிலையில் 1911-ம் ஆண்டு இன்றைய தேதியில் டெல்லிக்கு மாற்றப்பட்டது.
ஐரோப்பியரின் வருகைக்கு முன்னதாக முறையாக கட்டமைக்கப்படாத இந்தியாவே இருந்து வந்தது. பல மாகாணங்கள், சமஸ்தனங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவுக்கு 18-ம் நூற்றாண்டுகளில் வந்த பிரிட்டிஷார் கொல்கத்தாவை தலைமையிடமாக நிர்ணயித்தனர். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவடைந்து பின்னர் காலம் பிரிட்டன் அரசின் கீழ் இந்தியா வந்த பின்னரும் கொல்கத்தாவே தலைநகராக நீடித்தது. 1911-ம் ஆண்டு இதே நாளில் (டிச.12) ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920-ம் ஆண்டுகளில் பழைய டெல்லி நகருக்குத் தெற்கே, புதுடெல்லி என பெயர் பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947-ல் இந்திய விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்திய பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை என பிரசித்தி பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் புது டெல்லியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக மும்பையும், மருத்துவ தலைநகரமாக சென்னையும், அறியப்படுகிறது.

Comments
Post a Comment