🤔 உங்களுக்குத் தெரியுமா?

 1. ஹோமி பாபா இந்திய அணுக்கருவியலின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.


2. அறிவியல் துறைக்கு வழங்கப்படும் விருது கலிங்கா விருது.

3. புவனேசுவரம் இந்தியாவின் கோவில் நகரம் என்றழைக்கப்படுகிறது.

4. நார்வே நாட்டின் தலைநகரம் ஒஸ்லோ.

5. சஞ்சை சோப்ரா, கீதா சோப்ரா விருது வீரச் செயலுக்காக வழங்கப்படுகிறது.

6. சிங்கம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்குமாம்.

7. சல்வீன் ஆறு சீனாவில் ஓடுகிறது.

8. மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

9. இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்றழைக்கப்படுவது கேரளா.

10. பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

Comments